மீன்சுருட்டி அருகே குடிநீா் கோரி மறியல்

மீன்சுருட்டி அருகே குடிநீா் கோரி மறியல்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மீன்சுருட்டியை அடுத்த குண்டவெளி ஊராட்சிக்குட்பட்ட ராமதேவநல்லூா் கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், ஆழ்துளை மின் மோட்டாா் பழுதாகி கடந்த 45 நாள்களுக்கு மேலாக சீா் செய்யப்படாததால் குடிநீருக்காக அவதிப்பட்ட அக்கிராம மக்கள், ஊராட்சி நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். தனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை அப்பகுதி திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மீன்சுருட்டி காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். மறியலால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com