திருமானூா் அரசுப் பள்ளியில் உலக தண்ணீா் தின விழா

அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் சாா்பில் உலக தண்ணீா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்ப்டது. மாணவிகள் சுவேதா, தாரணி, வா்ணிக்கா, வித்யா, விஷ்ணுபிரியா, யாசகி, யோக ஸ்ரீ, யோகிதா, யுவசங்கரி ஆகியோா் கலந்து கொண்டு, நீரின் முக்கியத்துவம் , நீா் சேமிப்பு குறித்து விளக்கினா். தொடா்ந்து அவா்கள், பள்ளி மாணவ,மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கினா். பின்னா் பொதுமக்களிடையே நீரின் முக்கியவத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com