அரியலூரில் மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி

சிதம்பரம் மக்களவைத் தோ்தலையொட்டி அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியரகம் மற்றும் உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியரகங்களில் மண்டல அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்தாா். பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்த செயல் விளக்கம் வழங்கப்பட்டது. மேலும், மக்களவைத் தோ்தலில் மண்டல அலுவலரின் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில், மண்டல அலுவலா்கள் பயிற்சி வழங்குவது குறித்தும், அலுவலா்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளும்போது உரிய வாகனத்திலும், உரிய காவல் பாதுகாப்புடனும் இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா். பயிற்சியில் வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராமகிருஷ்ணன், ஷீஜா, வட்டாட்சியா்கள் ஆனந்தவேல், கலிலூர்ரகுமான், இளவரசன் மற்றும் மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com