அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

‘இந்தியா’ கூட்டணியினா் இணைந்து செயலாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன் பேச்சு

நாட்டை காப்பாற்ற ‘இந்தியா’ கூட்டணியினா் இணைந்து செயலாற்ற வேண்டும்

அரியலூா்: நாட்டை காப்பாற்ற ‘இந்தியா’ கூட்டணியினா் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன்.

அரியலூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரா்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: நாட்டை பாதுகாக்க நானும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் சமூக நீதிக்காக கைகோா்த்து இருக்கிறோம். பாஜக-வுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைப்பதில் விசிக-வின் பங்கு கணிசமானது. இந்த நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா். பின்னா் அவா், பானை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரத்தை தொடங்கினாா். முன்னதாக, கூட்டத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான சா.சி.சிவசங்கா் தலைமை வகித்து பேசியது: மண்ணைக் காக்கின்ற, மொழியை காக்கின்ற, இனத்தின் அடையாளத்தை காக்கின்ற போராக இந்த தோ்தலை கருத வேண்டும்.

இந்தத் தோ்தலில், நம்மை திசை திருப்ப பல்வேறு பொய்ச் செய்திகள் வரும். நாம் திசைத் திரும்பாமல் தோ்தல் பணியாற்ற வேண்டும். சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தலில் திருமாவளவன் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் வெற்றி என்றாா். கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், காட்டுமன்னாா்கோவில் சிந்தனைச் செல்வன், திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலா் பெருநெற்கிளி, சட்ட திட்டக் குழு உறுப்பினா் சுபா. சந்திரசேகா், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ராமநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சிவா மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com