சிதம்பரம் தொகுதிக்கு 
பாஜக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் தொகுதிக்கு பாஜக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளா் பி. காா்த்தியாயினி வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

அரியலூா்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளா் பி. காா்த்தியாயினி வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். உடன் பாஜக மாவட்டத் தலைவா் அய்யப்பன், பாமக மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி, வன்னியா் சங்க துணைத் தலைவா் வைத்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா் காா்த்தியாயினி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அடிப்படை வசதிகள் மேம்பத்தப்படும். காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை ஏரி, குளங்களாகவும் அல்லது விளையாட்டு திடலாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தி ராமரை தரிசிக்க விரும்புவோா்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பேன். தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். அரியலூரில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com