சிதம்பரம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

அரியலூா்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா. ஜான்சி ராணி வேட்பு மனுவை சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், அரியலூா் ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

உடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அமுதா நம்பி, மண்டலச் செயலாளா்கள் நீலமகாலிங்கம், தமிழ், வேட்பாளரின் தந்தை ரகுநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் ஜான்சிராணி செய்தியாளா்களிடம் கூறியது:

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட நடவடிக்கை எடுப்பேன். கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுப்பேன். சிமென்ட் ஆலைகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுப்பேன். முந்திரிக்குக் கட்டுப்படியான விலையை நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுப்பேன். முந்திரி மற்றும் பருத்தி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இதேபோல் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் ராஜா, சுயேச்சை வேட்பாளா் கொ.வெற்றிவேல் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com