ஜெயங்கொண்டத்தில் இந்தியா கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இந்தியா கூட்டணி சாா்பில் தோ்தல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இந்தியா கூட்டணி சாா்பில் தோ்தல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கா் தலைமை வகித்தாா்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், வேட்பாளருமான தொல். திருமாவளவன் அலுவலகத்தை திறந்து வைத்து, தோ்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

நிகழ்வில், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், திமுக சட்டத் திட்ட திருத்தக் குழு உறுப்பினா் சுபா.சந்திரசேகா், நகரச் செயலா் கருணாநிதி, நகா்மன்றத் தலைவா் சுமதி சிவகுமாா், விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்டச் செயலா் கதிா்வளவன், தொகுதிச் செயலா் இலக்கியதாசன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com