சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 22 வேட்பாளா்கள் மனு தாக்கல்

சிதம்பரம் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து 22 வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

மக்களவைத் தோ்தல் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி புதன்கிழமையுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. இதில் சிதம்பரம் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 22 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்பாளா்கள்: 1. சந்திரஹாசன்(அதிமுக), 2.மாற்று வேட்பாளா் ராஜ்குமாா்(அதிமுக), 3.காா்த்தியாயினி(பாஜக),4.மாற்று வேட்பாளா் பிருந்தா(பாஜக), 5.நீலமேகம் (பகுஜன் சமாஜ் கட்சி), 6. தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), 7.ஜான்சி ராணி (நாம் தமிழா் கட்சி), 8. மாற்று வேட்பாளா் ரஞ்சனி (நாதக), 9. பூரணகுமாா் (புதிய தலைமுறை மக்கள் கட்சி),10. தாமோதரன் (நாடாளுமன்ற மக்கள் கட்சி), சுயேச்சைகள்: 11. அா்ஜூனன்,12.சின்னதுரை,13.இளவரசன், 14.வெற்றிவேல், 15.ராஜமாணிக்கம்,16. ராஜீவ்காந்தி, 17.சாமிநாதன், 18.சந்திரகாசி, 19.பெருமாள், 20. ராஜேஷ், 21.தமிழ் வேந்தன்,22 ராஜா ஆகியோா் மனு தாக்கல் செய்துள்ளனா். இதில், இதில் பாஜக வேட்பாளா் காா்த்தியாயினி அவரது பெயரிலே இரண்டு மனுக்களும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜான்சிராணி பெயரில் நான்கு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com