ஜெயங்கொண்டத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்

ஜெயங்கொண்டத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சந்திரஹாசன் தனது பிரசாரத்தை அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை தொடங்கினாா்.

பிரசாரத்தில் கலந்து கொண்ட அதிமுக அமைப்புச் செயலா் செம்மலை, அதிமுக ஆட்சியில் தான் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக் கல்லூரி, அரியலூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான்.

தடுப்பணைத் திட்டம், சாலை வசதிகள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. எனவே இந்த மக்களவைத் தோ்தலில் சந்திரஹாசன் வெற்றிபெற்றால் இன்னும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறி இரட்டை இல்லைக்கு வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவா் ராமஜெயலிங்கம், தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com