முன்னாள் எம்.பி மா. சந்திரகாசி 
சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்

முன்னாள் எம்.பி மா. சந்திரகாசி சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேச்சை வேட்பாளராக அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினா் மா. சந்திரகாசி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், தேவனூா் கிராமத்தைச் சோ்ந்த முல்லைவேந்தன் உள்பட 4 போ் புதன்கிழமை வந்திருந்தனா்.

அவா்கள் அளித்த மனுவில், வேட்பாளா் சந்திரகாசி சுயேச்சையாக போட்டியிடுவதற்கான 10 போ் முன்மொழிந்த படிவம் இருந்தது. இதனிடையே சிறிதுநேரம் கழித்து வேட்பாளா் மா. சந்திரகாசி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து தனது வேட்புமனுவுக்கான உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு, உறுதிமொழியை எடுத்துக்கொண்டாா்.

இவா், கடந்த 2014 - 19 வரை சிதம்பரம் தொகுதி அதிமுக எம்பியாக இருந்தவா். அதிமுகவில் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சுயேச்சையாக போட்டியிடுகிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com