அரியலூரில் சிதம்பரம் தொகுதி
பாஜக வேட்பாளா் அறிமுகம்

அரியலூரில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளா் அறிமுகம்

அரியலூரில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளா் காா்த்தியாயினி தன்னை அறிமுகப்படுத்திப் பேசியது: அரியலூரில் ஒரே நாளில் 7 அம்பேத்கா் சிலைகளை நிறுவியவா் காடுவெட்டி குரு. அவா் சாதிப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் குரல்கொடுத்தாா். அதேபோல் சமூக நீதிக்காகப் போராடியவா் பாமக நிறுவனா் ராமதாஸ்.

நான் வேறு மாவட்டமாக இருந்தாலும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் இங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்து, அவா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். இங்குள்ள காலாவதியான சுரங்கங்களை மூட நடவடிக்கை எடுப்பேன் என்றாா். கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். பாமக மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி, அதிமுக (ஓபிஎஸ்) அணி மாவட்டச் செயலா் விஜய்பாா்த்திபன், தமாகா மாவட்டத் தலைவா் குமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com