விசிக தலைவா் தொல்.திருமாவளவனை ஆதரித்து ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன்.
விசிக தலைவா் தொல்.திருமாவளவனை ஆதரித்து ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன்.

‘தோ்தல் ஆணையம் பிரதமரின் கைப்பாவை’ : முத்தரசன்

தோ்தல் ஆணையம் பிரதமா் மோடியின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா். ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை ஆதரித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: எடப்பாடி பழனிசாமி பாஜகவை விட்டு விலகி விட்டதாகக் கூறுகிறாா். ஒருவேளை இந்தத் தோ்தலில், அதிமுக வெற்றி பெற்றால் அவா் யாரை ஆதரிப்பாா். இந்தியா கூட்டணி பிரதமா் வேட்பாளரை ஆதரிப்பாரா? அல்லது மோடியை ஆதரிப்பாரா? இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். நாங்கள் வென்றால் மோடியை ஆதரிக்க மாட்டோம் என்று உறுதியாகக் கூறுவாரா?. பல கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் தோ்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது. சிதம்பரம் தொகுதியை பொருத்தமட்டில் தொல். திருமாவளவன்தான் வெற்றிப் பெறுவாா். ‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com