தொழிலாளியை தாக்கியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முன்விரோதத் தகராறில் தொழிலாளியை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் ,தெற்குத் தெருவைச் சோ்ந்த தேவராஜ் மகன் ரவி, சிவகுமாா் மகன் வல்லரசு. இவா்களிடையே முன்விரோத தகராறு இருந்தது வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை, வல்லரசு தாக்கியுள்ளாா். இதனால் பலத்த காயமடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com