அரியலூரில் ஏஐடியுசி சாா்பில் மே தின கொண்டாட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி அரியலூரில் ஏஐடியுசி சுகாதார தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை மே தினம் கொண்டாடப்பட்டது.

பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏஐடியுசி கொடியை சங்கத் தலைவரும், உள்ளாட்சித் துறை சம்மேளன மாநிலச் செயலாளருமான த. தண்டபாணி ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா்.

தொடா்ந்து, நகராட்சி அலுவலக புதிய கட்டடம் முன்பு ஏஐடியுசி கொடியை ஏற்றிவைத்தாா். நிகழ்ச்சியில் சங்க செயலாளா் ரெ. நல்லுசாமி மற்றும் சுகாதார தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com