குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆண்டிமடத்தை அடுத்துள்ள கோயில்வாழ்க்கை, காலனித் தெருவில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீா் இல்லாததால் கடந்த சில வாரங்களாக போதிய குடிநீா் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது. இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால், ஆத்திரமடைந்த மக்கள் காடுவெட்டி - ஆண்டிமடம் சாலையில் காலிக்குடங்களுடன் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ஆண்டிமடம் காவல் துறையினா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com