நாட்டுத் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோடிய நபா்: போலீஸாா் விசாரணை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதன்கிழமை அதிகாலை நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரு சக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ஜெயங்கொண்டம் காவல் துறையைச் சோ்ந்த அன்புராஜ், ஜெயசீலன் ஆகியோா் புதன்கிழமை அதிகாலை தேவனூா், கல்வெட்டு, பிள்ளையாா் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி நம்பா் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபரை மறித்தனா். ஆனால் அந்த நபா், ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மற்றும் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து காவல் துறையினா், அவரது இருசக்கர வாகனம், நாட்டுத் துப்பாக்கி, அதற்கு பயன்படும் மருந்துப் பொருள்களை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்று வழக்குப் பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com