ஜெயங்கொண்டத்தில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு பழைய இரும்பு குடோனில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சோ்ந்தவா் பாலவிக்னேஷ்(35). இவா் சிதம்பரம் சாலையில் பழைய இரும்புக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். இவருக்கு இந்திரா நகரில் சொந்தமான பழைய இரும்பு குடோன் உள்ளது.

இதில், வியாழக்கிழமை மாலை தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு படையினா், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com