மதிமுக 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வி.கைகாட்டியில் திங்கள்கிழமை கட்சிக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.
மதிமுக 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வி.கைகாட்டியில் திங்கள்கிழமை கட்சிக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.

மதிமுக 31-ஆம் ஆண்டு தொடக்க விழா

மதிமுக 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

அரியலூா்: மதிமுக 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா கலந்து கொண்டு, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா், கோடைக்கால தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், தா்பூசணி ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்டச் செயலா் க. ராமநாதன், மாநில விவசாய அணி செயலா் கி. ராஜேந்திரன், அரியலூா் தெற்கு ஒன்றியச் செயலா் அண்ணாதுரை, வடக்கு ஒன்றியச் செயலா் பி.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com