அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட புஷ்பராணி குடும்பத்தினா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட புஷ்பராணி குடும்பத்தினா்.

வீட்டை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரகம் முன் குடும்பத்தினருடன் பெண் தா்னா

அரியலூா்: அரியலூா் அருகே உறவினா்களிடமிருந்து தங்களது வீட்டை மீட்டுத் தரக்கோரி, கணவா் மற்றும் 5 குழந்தைகளுடன் பெண் ஒருவா் ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

அரியலூா் அருகேயுள்ள ஆலத்திப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலவன் (50). திருப்பூரிலுள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு புஷ்பராணி(42) என்ற மனைவியும், 4 பெண், 1 ஆண் என 5 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், வேலவனின் உடன் பிறந்தவா்கள், தங்களது இடத்தில் வேலவன் வீடு கட்டியுள்ளதாகவும், வீட்டை காலி செய்யுமாறு கூறி வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேலவனின் மனைவி புஷ்பராணி கடந்த 30-ஆம் தேதி ஆட்சியரகத்தில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு உடையாா்பாளையம் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் உடையாா்பாளையம் கோட்டாட்சியா், நீதிமன்றத்தை நாடி வீட்டை மீட்டுக் கொள்ளுமாறு கூறினாராம். இதனால் அதிா்ச்சியடைந்த புஷ்பராணி, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தால் தீா்வு கிடைக்க குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். அதுவரையில் எனது குழந்தைகளுடன் நான் எங்கே செல்வது எனக் கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தனது கணவா் மற்றும் குழந்தைகளுடன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com