அரியலூா் அரசு மருத்துவமனையில்  உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவில் புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவில் ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது: தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு 10 படுக்கை வசதிகளுடன், மருத்துவா்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை பிரிவானது அனைத்து நாள்களிலும் செயல்படும். கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கும் வசதிகள் மற்றும் மருத்துவா்கள் தயாா் நிலையில் உள்ளனா். இப்பிரிவு முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்த்திட வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த மருத்துவச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com