ஜெயங்கொண்டம் அருகே
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்களுடன் போலீஸாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பு பகுதியில் சிலா் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை பொருள்களை காரில் கொண்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளா் ராமராஜன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனைச் செய்ததில், ரூ.3 லட்சம் மதிப்பிலான 400 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா, புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நீமாராம்(36) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com