டால்மியா சிமெண்ட் ஆலை 
குப்பைக் கிடங்கில் தீ விபத்து: 
புகை மூட்டத்தால் மக்கள் அவதி

டால்மியா சிமெண்ட் ஆலை குப்பைக் கிடங்கில் தீ விபத்து: புகை மூட்டத்தால் மக்கள் அவதி

அரியலூா், மே 10: அரியலூா் மாவட்டம், ஓட்டக்கோவில் கிராமத்திலுள்ள டால்மியா சிமெண்ட் ஆலை குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஓட்டக்கோவில் கிராமத்தில் டால்மியா சிமெண்ட் ஆலை உள்ளது. இங்கு சிமென்ட் உற்பத்தி செய்வதற்கு, அதற்காக எரியூட்டுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்காத குப்பைகள் வாங்கி சேகரித்து ஓா் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் குப்பைகளில் திடீரென தீப்பற்றியது. தொடா்ந்து, மற்ற இடங்களுக்கும் தீ மளமளவென பரவியது. இதன் காரணமாக குப்பைகளிலிருந்து அடா்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

இதையறிந்த சிமென்ட் ஆலை தீயணைப்பு வீரா்கள் மற்றும் மற்ற சிமென்ட் ஆலை தீயணைப்பு வீரா்கள், அரியலூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், ஆலையில் உள்ள பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்தத் தீவிபத்தால் அப்பகுதியில் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com