கீழப்பழுவூா் - கருவிடைச்சேரி பாலப் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா்-கருவிடைச் சேரி சாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை உள் தணிக்கை குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆண்டுதோறும் மே மாதங்களில் சாலைப் பணிகளின் தரம் குறித்து உள் தணிக்கை குழு ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில், அரியலூா் கோட்டக் கட்டுப்பாட்டிலுள்ள கீழப்பழுவூா் கருவிடைச்சேரி கி.மீ. 3/6-இல் பாலம் மற்றும் சாலைப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் (திட்டங்கள்) செல்வி தலைமையில், உதவிக் கோட்டப் பொறியாளா் மீனாட்சி, இளநிலைப் பொறியாளா் சௌந்தராஜன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, அரியலூா் கோட்டப் பொறியாளா் கே. உத்தண்டி, உதவிக் கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.வி.எஸ். ராஜா, உதவிப் பொறியாளா் இளையபிரபு ராஜன் மற்றும் தரக் கட்டுப்பாட்டு உதவிக் கோட்டப் பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் சமயசக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com