சீரான குடிநீா் கேட்டு 
மக்கள் சாலை மறியல்

சீரான குடிநீா் கேட்டு மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சீரான குடிநீா் கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆண்டிமடம் அடுத்த இடையக்குறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மேல்நிலைநீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக இக்கிராமத்தில் சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆண்டிமடம் - இடையக்குறிச்சி சாலையில், காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுட்டனா். தகவலறிந்து அங்கு வந்த குவாகம் காவல துறையினா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com