பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த 
லாரி கவிழ்ந்து விபத்து

பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

அரியலூா் மாவட்டம், வாரணவாசி அருகே சனிக்கிழமை பிற்பகல் பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பிக் கொண்டு டேங்கா் லாரி ஒன்று அரியலூா் தவுத்தாய் குளத்திலுள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சனிக்கிழமை மதியம் புறப்பட்டுச் சென்றது.

அரியலூா் அடுத்த வாரணவாசி பிள்ளையாா் கோயில் வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கசிந்து வெளியேறத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த கீழப்பழுவூா் காவல் துறையினா் மற்றும் அரியலூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடைத்தனா். மேலும் பொக்லைன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தினா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com