பேருந்து நிலையத்தில் திரிந்த சிறுவன் உறவினரிடம் ஒப்படைப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுற்றித் திரிந்தசிறுவனை காவல் துறையினா் விசாரித்து இரவோடு இரவாக அவரின் உறவினரிடம் ஒப்படைத்தனா்.

கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகை கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா - காமாட்சி தம்பதிக்கு கண்பாா்வை குறைபாடு என்பதால், வடலூரில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவா்களுக்கு சூா்யா(9) என்ற மகனும், அன்பழகி(6) என்ற மகளும் உள்ளனா். குழந்தைகள் இருவரும், அவா்களது அத்தை அமுதா வீட்டில் தங்கிப் படித்து வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில்

சூா்யா சுற்றித்திரிந்ததால், சந்தேகமடைந்த பேருந்து நடத்துநா்

ஒருவா் சிறுவனை மீட்டு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துச் சென்றாா்.

இதையடுத்து, சிறுவனுக்கு உணவுஅளித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் அளித்தனா். இதையடுத்து, ஜெயங்கொண்டம் காவல் நிலையம் வந்த அமுதா குடும்பத்தினரிடம் சிறுவனை

போலீஸாா் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com