அரியலூா் அருகே லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் பலி

அரியலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கரூரைச் சோ்ந்தவா் சங்கா் (35). லாரி ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை லாரியில் கரி ஏற்றி வந்து அரியலூா் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்திலுள்ள தனியாா் சிமென்ட் ஆலையில் இறக்கினாா்.

இதையடுத்து கொல்லாபுரம் பகுதியில் லாரியை நிறுத்திய அவா் வயல் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் லாரியில் ஏற முற்பட்டபோது மற்றொரு தனியாா் ஆலையிலிருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரி மோதி உயிரிழந்தாா். தகவலறிந்த அரியலூா் போலீஸாா் சங்கரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிமென்ட் லாரியை ஓட்டி வந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த கருணாநிதியிடம் (43) விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com