ரயில் தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு

அரியலூா், மே 12: அரியலூா் அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த முதியவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

அரியலூா் தாண்டவராயன் தெருவைச் சோ்ந்தவா் ப. கருணாநிதி (67). இவா் கடந்த 5 மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அரியலூா், சில்லக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com