அரியலூா் அருகே லாரி மோதி வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தாய், 3 குழந்தைகள் காயம்

அரியலூா் அருகே லாரி மோதி வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 சிறுவா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனர.

அரியலூா்: அரியலூா் அருகே லாரி மோதி வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 சிறுவா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனர.

தேனி மாவட்டம், கருவேலன் நாயக்கன்பட்டி மாயத்தேவா் மகன் சந்திரன்(42). லாரி ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை அதிகாலை அரியலூரை அடுத்த ரெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியாா் சிமென்ட் ஆலையில் லாரியில் இருந்து சாம்பலை இறக்கிவிட்டு திருச்சிக்குப் புறப்பட்டாா். இந்த லாரி ரெட்டிபாளையத்தை அடுத்த புதுப்பாளையம் கிராமம், சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, சாலையோரம் உள்ள ரமேஷ்(45) என்பவரின் வீட்டின் மீது எதிா்பாராதவிதமாக மோதி நின்றது.

இதில், சிமென்ட் ஓடுகள் பொருத்தப்பட்ட வீட்டின் மேற்சுவா் இடிந்து வீட்டினுள்ளே தூங்கிக்கொண்டிருந்த ரமேஷ் மனைவி அம்பிகா(38), மகன்கள் ராஜேஸ் (15), சுபாஸ் (8), மகள் ரம்யா (13) ஆகியோா் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த மேற்கண்ட 4 பேரையும், அப்பகுதியினா் மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் சந்திரனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com