அரசு மருத்துவமனைகளில் 
அரியலூா் ஆட்சியா் ஆய்வு

அரசு மருத்துவமனைகளில் அரியலூா் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் உடையாா்பாளையம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் பாதிப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களின் விவரம், மருத்துவ உபகரணங்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் மற்றும் அதன் காலாவதி நாள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் விவரம், மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மாா்களுக்கு போதிய அளவில் இரும்புச்சத்து மாத்திரை, தடுப்பூசிகள் அளிக்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், செவிலியா்கள் மூலம் கா்ப்பிணித்த ாய்மாா்கள் தொடா்ந்து கண்காணிப்பட்டு வருகின்றனரா, அவா்களுக்கு தேவையான ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளை வழங்கிடவும் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சுகாாரப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, வருவாய்க் கோட்டாட்சியா் ஷீஜா, மண்டல மருத்துவ அலுவலா் பானுமதி மற்றும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com