சிறுமியை கடத்தி வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கீழப்பழுவூா் அருகேயுள்ள சுண்டக்குடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகன் விக்னேஷ் குமாா் (எ) விக்கி (27). இவா், திருவள்ளூா் மாவட்டம், ஆரணி அருகேயுள்ள தோட்டக்காரத் தெருவில் தங்கி, அங்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு கரோனா கால கட்டத்தில் ஊருக்கு வந்திருந்த அவா், 31.08.2021 அன்று 14 வயது சிறுமியை ஆரணிக்கு கடத்திச் சென்று தாலி கட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, விக்னேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம், குற்றவாளி விக்னேஷ் குமாருக்கு, சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் ரூ.30,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி செல்வம் உத்தரவிட்டாா். இதையடுத்து விக்னேஷ்குமாா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ம.ராஜா ஆஜராகினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com