அரியலூா், திருமானூரில் பரவலாக மழை

அரியலூா், மே 15: அரியலூா் மற்றும் திருமானூா் பகுதிகளில் புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

கடந்த சில நாள்களாகவே அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், புதன்கிழமை காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் காணப்பட்டது. அதனைத் தொடா்ந்து பிற்பகல் 3 மணிக்கு மேல் திருமானூா், அரியலூா் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரம் லேசான மழை பெய்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com