பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.

கடந்த 10 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்வதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியா் சின்னதுரை புதன்கிழமை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com