அரியலூரில் கோடைக்கால 
ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

அரியலூரில் கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுடன் ஹாக்கி கழக நிா்வாகிகள்.

அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

அரியலூா் மாவட்ட ஹாக்கி இந்தியா, டாக்டா் அப்துல்சாதிக் நினைவு ஹாக்கி கழகம், பசுபதி நினைவு ஹாக்கி கழகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமில், 50 மாணவா்கள், 25 மாணவிகள் என 75 போ் கலந்து கொண்டு ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்தனா்.

மாவட்ட ஹாக்கி பயிற்சியாளா் ராஜ்குமாா், பயிற்சியாளா்கள் மணிகண்டன், கவின் ஆசாத், ரஞ்சித் ஆகியோா் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு ஹாக்கி பயிற்சி அளித்தனா்.

வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஏ.எஸ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அகமது ரபி, ஹாக்கி இந்திய மாவட்ட துணைச் செயலா் யோகநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் லெனின், எருத்துக்காரன்பட்டி ஊராட்சித் தலைவா் பரமசிவம் கலந்து கொண்டு, பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். முன்னதாக, பசுபதி ஹாக்கி கழகச் செயலா் குணசேகரன் வரவேற்றாா். நிறைவில், துணைச் செயலா் மகேஷ்பாபு நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com