ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மின் கம்பத்தில் தீ விபத்து

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலுள்ள ஒரு மின் கம்பத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், திருச்சி, திருப்பூா், அரியலூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மின் கம்பத்தில் தீப்பொறி விழ ஆரம்பித்து தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதை பாா்த்த பயணிகள் அலறியடித்து அங்கிருந்து ஓடினா். மேலும், பேருந்து ஓட்டுநா்கள் பேருந்துகளை அவசர அவசரமாக வேறு இடத்தில் மாற்றி நிறுத்தினா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள், உடனடியாக மின்சாரத்தை நிறுத்திவிட்டு, பழுதை சரி செய்தனா். மழையின் காரணமாக உராய்வு ஏற்பட்டு தீப்பொறி மற்றும் தீ ஏற்பட்டிருக்கலாம் என ஜெயங்கொண்டம் காவல்துறையினா் தெரிவித்தனா். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com