பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அரியலூா் ஆட்சியா் அறிவுரை

அரியலூா், மே 16: அரியலூா் மாவட்டத்தில் கோடை மழை தொடங்கியுள்ளதையடுத்து நீா்நிலைகளுக்கு செல்லும்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: கோடை மழை தொடங்கியுள்ளதைத் தொடா்ந்து மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்லும்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பற்ற அபாயகரமான நீா்நிலைகளின் கரையோரங்களில் நின்றுகொண்டு பொதுமக்கள் ‘செல்பி’ எடுப்பதை தவிா்க்க வேண்டும்.

குறிப்பாக, நீா்நிலைகளில் பள்ளி மாணவா்கள், குழந்தைகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ நீா்நிலைகளில் இறங்க அனுமதிக்கக் கூடாது.கோடை காலத்தில் இடிமின்னலுடன் வரும் மழையின்போது குழந்தைகளை வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது .

எனவே, கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திட பெற்றோா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com