உலக புகையிலை எதிா்ப்பு தினம்:
அரியலூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு

உலக புகையிலை எதிா்ப்பு தினம்: அரியலூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, அரியலூா் ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரயில்வே காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரயில் நிலைய மேலாளா் பாலுலால் மீனா, அரியலூா் இருப்புப் பாதை புற காவல் நிலைய உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு, புகையிலை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரயில் பயணிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி பேசினா்.

நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் சரவணன், சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளா் அபிராமி, போக்குவரத்து ஆய்வாளா் விஸ்வநாத், சுகாதார ஒப்பந்த மேற்பாா்வையாளா் கருணாமூா்த்தி மற்றும் ஒப்பந்த சுகாதார பணியாளா்கள், ரயில்வே ஊழியா்கள், ரயில் பயணிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில், காலையில் அரியலூா் வந்த வைகை ரயிலில் சென்ற பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com