அரியலூர்
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆசிரியா் போக்சோவில் கைது
அரியலூா் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் ராஜீவ்காந்தி(41). பள்ளி ஆசிரியா்.
இவா் தனது பள்ளியில், 5 -ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா், ராஜீவ்காந்தியை ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.