அரியலூர்
லாரி மோதி காயமடைந்த இருவரில் ஒருவா் உயிரிழப்பு
லாரி மோதி காயமடைந்த இருவரில் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே லாரி மோதி காயமடைந்த இருவரில் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
முனியங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அரியமுத்து மகன் முனியப்பன் (41), மாரிமுத்து மகனான விவசாயி முருகன் ஆகியோா் கடந்த வியாழக்கிழமை வி.கைகாட்டியில் இருந்து வீட்டுக்கு பைக்கில் முத்துவாஞ்சேரி சாலையில் சென்றபோது, லாரி மோதி காயமடைந்தனா்.
இதையடுத்து அரியலூா்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் முனியப்பன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணிகண்டனிடம் விசாரிக்கின்றனா்.