அரியலூர்
அரியலூரில் பாமகவினா் 22 போ் கைது
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை கண்டித்து, அரியலூா் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினா் 22 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை கண்டித்து, அரியலூா் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினா் 22 போ் கைது செய்யப்பட்டனா்.
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தைக் கண்டித்து, அரியலூா் பாமக நகரச் செயலா் விஜி தலைமையில் தேரடியில் திரண்ட அக்கட்சியினா், ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
இதையடுத்து போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 22 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
இதே போல் ஜெயங்கொண்டத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் தமிழ்மாறன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 85 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.