பெய்த மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தில் செல்லும் நபா்.
பெய்த மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தில் செல்லும் நபா்.

அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும், இடைவிடாத மழை செவ்வாய்க்கிழமை பெய்தது.
Published on

அரியலூா் மாவட்டம் முழுவதும், இடைவிடாத மழை செவ்வாய்க்கிழமை பெய்தது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய மழையானது தொடா்ந்து இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடிக்கால் வசதிகள் இல்லாததால் மழை நீா் தேங்கியுள்ளது.

அரியலூா் புதுமாா்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்திசந்தை, வெள்ளாளத்தெரு, பெரம்பலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது.

பிற்பகலிலேயே பெரம்பலூா்-தஞ்சாவூா் சாலையில் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றன.

ஜெயங்கொண்டம், உடையாா்பாளையம், கீழப்பழுவூா், திருமானூா், தா.பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இதனால் மாவட்ட முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலன பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.