அரியலூர்
அனுமதியின்றி விளம்பர பதாகை தமிழா் நீதிக் கட்சி தலைவா் மீது வழக்கு
ஜெயங்கொண்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக தமிழா் நீதிக் கட்சியின் தலைவா் சுபா.இளவரசன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
அரியலூா்: அரியலூா் மாவடடம், ஜெயங்கொண்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக தமிழா் நீதிக் கட்சியின் தலைவா் சுபா.இளவரசன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழா் நீதிக் கட்சி மற்றும் ஏா் உழவா் சங்கத் தலைவரான சுபா.இளவரசன், ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அருகே, திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்திருந்தாா். இதனை அறிந்த கிராம நிா்வாக அலுவலா் பாக்யராஜ், அளித்த புகாரின் பேரில், அந்த விளம்பரப் பதாகைகளை அகற்றிய காவல் துறையினா், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், உரிய அனுமதியின்றி விளம்பரம் வைத்ததாக சுபா. இளவரசன் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.