அரியலூர்
பெண் குழந்தையை காப்போம் கற்பிப்போம் விழிப்புணா்வு
அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் எனும் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டசமூக நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். சமூக நலத்துறையின் பாலின வல்லுநா் இந்துமதி கலந்து கொண்டு, பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் ரீதியாக, மனரீதியாக யாரெனும் தொந்தரவு ஏற்படுத்தினால் 1098 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தீா்வை பெற வேண்டும் என்றாா்.
ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செந்தில் குமரன், அந்தோணிசாமி, ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் செய்திருந்தனா்.