ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் மனு அளித்த கல்லாத்தூா் கிராம மக்கள்.
ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் மனு அளித்த கல்லாத்தூா் கிராம மக்கள்.

ஜெயங்கொண்டத்துடன் இணைப்பு கல்லாத்தூா் மக்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் கல்லாத்தூா் கிராமத்தை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் கல்லாத்தூா் கிராமத்தை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு வந்திருந்த அவா்கள், அங்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமியை சந்தித்து அளித்த மனு: எங்கள் கல்லாத்தூா் கிராமத்தை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால், குடிநீா் வரி, சொத்து வரி என அனைத்தும் உயா்த்தப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பறிபோவது மட்டுமன்றி, மத்திய, மாநில அரசுகள் கிராமங்களுக்கு வழங்கும் இலவச வீடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைக்காமல்போகும். எனவே, எங்களது கிராமத்தை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்கும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com