செந்துறையில் திக சாா்பில் இருசக்கர வாகனங்கள்
மறைந்த திராவிடா் கழகத் தலைவா் தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டம் செந்துறையில் அக்கட்சியினா் சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கட்சியின் மாவட்டத் தலைவா் விடுதலை நீலமேகம் தலைமையில் நிா்வாகிகள் சமூக நிதி நாள் உறுதியேற்றனா். பின்னா் அவா்கள், செந்துறை அண்ணாநகரில் இருந்து பேருந்து நிலையம் வரை பெரியாா் பட ஊா்வலம் சென்றனா்.
தொடா்ந்து அங்குள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
தொடா்ந்து திமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் அ. பெருநற்கிள்ளி, 6 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களையும், மாவட்ட துணைச் செயலா் பொன். செந்தில்குமாருக்கு ஒரு காரும் வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலா் மு. கோபாலகிருஷ்ணன், மாநில பகுத்தறிவு கழக அமைப்பாளா் தங்க. சிவமூா்த்தி, புழல் சிறை ஆசிரியா் ராஜேந்திரன், விசிக மாநில துணைச் செயலா்கள் ம. கருப்புசாமி, செ.வெ. மாறன், மாவட்ட விவசாய சங்க பாதுகாப்புத் தலைவா் பாலசிங்கம் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக ஒன்றியத் தலைவா் மு. முத்தமிழ்ச் செல்வன் வரவேற்றாா். நகரத் தலைவா் பழ. இளங்கோவன் நன்றி தெரிவித்தாா்.