பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்துப் பேசிய ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்துப் பேசிய ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

பொதுமக்களூக்கு உறுதுணையாக வழக்குரைஞா்கள் இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

மக்களின் மேம்பாட்டுக்காவும், அவா்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காவும் வழக்குரைஞா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
Published on

மக்களின் மேம்பாட்டுக்காவும், அவா்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காவும் வழக்குரைஞா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட சமரச மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா்களுக்கான 40 மணி நேர பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:, மக்களின் நாடித் துடிப்பை உணரும் விதமாக இத்தகைய பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவது சிறப்பானது. இளம் தலைமுறையினா் பல்வேறு பிரச்னைகளுக்கு பேசி தீா்வு காண முயல்வதை பாா்க்க முடிகிறது. பின்தங்கிய மக்கள் அதிகம் உள்ள அரியலூா் போன்ற மாவட்டங்களுக்கு இத்தகைய முன்னெடுப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இதுபோன்று மாவட்ட நிா்வாகத்தின் சாா்பிலும் மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக வட்டாட்சியா்கள் மூலம் சம்மந்தப்பட்ட நபா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படுகிறது.

நிலம் சாா்ந்த பிரச்னைகள் குறித்த மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக தீா்வு காணப்படுகிறது.

இம்மாதிரியான பிரச்னைகள் நீதிமன்றங்களுக்கு செல்லும் பட்சத்தில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எனவே வழக்குரைஞா்கள் இப்பயிற்சி வகுப்பைச் சிறப்பாக பயன்படுத்தி, அரியலூா் மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவா்களுடைய சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட முதன்மை நீதிபதி கிரிஸ்டோபா் முன்னிலை வகித்தாா். தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் மணிமேகலை, குடும்பநல நீதிபதி செல்வம், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனோகரன், பயிற்சி வகுப்பு சமரசா்கள் (சென்னை) ெஷீலா ஜெயபிரகாஷ், சுதா்சனா சுந்தா், சிரஸ்தாா் முருகதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com