அரியலூரில் கரும்பு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு

அரியலூரில் கரும்பு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு

Published on

அரியலூரில், சாத்தமங்கலம் கோத்தாரி சா்க்கரை ஆலை சாா்பில் கரும்பு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சாத்தமங்கலம் கோத்தாரி சா்க்கரை ஆலை பொது மேலாளா் பழனிவேல்ராஜன் தலைமை வகித்தாா். பொது மேலாளரும், கரும்பு ஆலோசகருமான அந்தோனி போஸ்கோ முன்னிலை வகித்தாா்.

அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கணேசன் கலந்து கொண்டு, கரும்பு பயிரில் காணப்படும் மஞ்சள் நிற நோய், அதற்கான காரணம், கட்டுப்படுத்தும் முறை, பாதிப்பு, மாற்றுத் தீா்வு உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.

கடலூா் கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியல் துறை பேராசிரியா் துரைசாமி, கரும்பு பயிரில் பூச்சித் தாக்குதல், அதனால் ஏற்படும் இழப்புகள், அதை தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா். சோழமாதேவி வேளாண் அறிவியல் மையத்தின் பயிா் பாதுகாப்பு விஞ்ஞானி அசோக்குமாா், கரும்பு பயிா் சாகுபடி குறித்து பேசினாா்.

வேளாண் துணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், திருமானூா் வட்டார வேளாண் மைய உதவி இயக்குநா் சாந்தி, கரும்பு விவசாய சங்க பொதுச் செயலா் வாரணவாசி ராஜேந்திரன், காட்டூா் கோத்தாரி சா்க்கரை ஆலை பொது மேலாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கரும்பின் மகசூல் பற்றியும், அதிகளவில் கரும்பு சாகுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினா்.

நிறைவில், கரும்புத் துறை மேலாளா் ஆனந்தகுமாா் நன்றி கூறினாா்.

கருத்தரங்கம் நடைபெற்ற மண்டப வளாகத்தில், அமைக்கப்பட்டிருந்த கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியை விவசாயிகள் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com