போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், நகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மையே சேவை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீரன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி ஆணையா் அசோக்குமாா் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பேரணியில், அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் முத்துக்குமாா், களப் பணி உதவியாளா் விஜயகுமாா், துப்புரவு பணி மேற்பாா்வையாளா் காளிமுத்து , தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள் பாலகுமாரன், மணிகண்டன், பிரபாகரன், ரேகா, ஜோதி, உமாதேவி, கலையரசி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், செவிலியா் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள் என 700 போ் கலந்து கொண்டு, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டவாறு சென்றனா்.
பேரணியானது, ஜெயங்கொண்டம் கடைவீதி, பிரதான சாலை வழியாகச் சென்று அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.