தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க இணையம் வாயிலாக அக். 24-க்குள் விண்ணப்பிக்கலாம்.
Published on

தீபாவளியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க இணையம் வாயிலாக அக். 24-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:

அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை இணையம் வழியாக பதிவேற்றலாம். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், இருப்பிட முகவரிச் சான்று, கடை வைக்கப்படும் இடத்தின் முகவரிக்கான சான்று, பான் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றுடன் உரிமக் கட்டணம் ரூ.500 -ஐ இ-சலான் மூலம் செலுத்திய சீட்டு அசல், சொந்தக் கட்டடம் எனில் பட்டா நகல்,வாடகைக் கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம், இடத்துக்கான சொத்து வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com