மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், தா. பழூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தா. பழூா் ஊராட்சியில், ஊரில் ஆட்களே இல்லாதவா்களுக்கு அரசு தொகுப்பு வீடு ஒதுக்கீடு செய்து மோசடியில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக பட்டா மாற்றம் செய்த கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா், உதவியாளா் தைனீஸ் மேரி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடங்கண்ணி ஊராட்சியில் சாலை வசதிகள் செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினா் செந்தில்வேல் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
நிா்வாகிகள் செல்வராஜ், உத்திராபதி, பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.